கலைப்பெட்டகம்

மேலைக்கடம்பூர் -கலைப்பெட்டகம் என்ற சொல்லுக்கு

 மிக பொருத்தமானதொரு கோவில்..!!

 
எதை காண்பது ?

எதை விடுப்பது ?என்று அல்லாட்டத்தை கண்களுக்கும், மனதுக்கும் தந்துவிடக்கூடிய வலிமை நிறைந்தது .

அப்பர் பெருமானின் பதிகத்தால்

” நங்கடம்பனை பெற்றவள் பங்கினன் தென்கடம்பை திருக்கரக்கோயிலான் தங்கடன்னடியேனை யுந் தாங்குதல்

என் கடன் பணிசெய்து கிடப்பதே ” 

கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு 

முன்பாக கட்டப்பட்டதாக கொள்ளக்கூடிய கோவில் 

முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது .ஒரு தேரின் முழு வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இக்கோவில் இதன் விமானத்தை சுற்றியுள்ள ஆடற்கரண ஆரணங்குகளால் அழகேன்ற சொல்லுக்கு  புதிய அர்த்தத்தை கற்பிக்கின்றன . கையின் உள்ளங்கை அகலத்தில் தொடராக உள்ள இராமாயண ,மகாபாரத காட்சிகள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் .
இராஜராஜ சோழரின் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட மாளிகை அமைந்திருந்த இடமும் இதன் அருகிலேயே இருக்கின்றது .ஆனால் வெறும் மண்மேடாக .ஆயிரம் கதைகளை உங்களுக்கு சொல்ல க்காத்திருக்கும் மேலக்கடம்பூருக்கு எப்போது செல்லப்போகிறீர்கள் ?

மேலக்கடம்பூர், சிதம்பரம் அருகில்.!- கடலூர்Dt.

Published by zunidhi

passionate computer science programmer and enthusiastic in new learnings

Leave a comment